Thursday, February 25, 2021

பொம்பளயின்னா பூமாதிரியின்னு யார் சொன்னது…..

 

கொதிக்குற தண்ணீ

நெருப்புத் துண்டு

பட்டுன்னு கையில

எடுத்திடும் எங்கம்மா

 

வெயிலுக்காத்தான்

முள்ள வெட்டும்

வெட்டிய வெரக

வெரசா கொண்டுவரும்

ஒரு காதம் கடந்தும்...

 

 உச்சி வெயில்லியும்

களையப் புடுங்கும்

 

திருணா அன்னக்கி

தீ மிதிக்கும்

வெளக்க வெறும்

கையிலேயே அணைக்கும்

 

படிக்காம சுத்தனா

பெரம்பு பிச்சிக்கும்

காட்டு வேல் செய்ஞ்சி

கை காப்புகாட்சி போயிருக்கும்

 

யார் சொன்னது

ஆணவிட கொறச்சியின்னும்

பொம்மளயின்னா

பூமாதிரியின்னும்…..

1 comment:

குடிசை வாசிகள்

  நவீன மயமாக்கப்பட்ட நகர வீதியின் பூர்வகுடிகள் மழை பெய்து விட்டால் வானத்தின் கருமேகங்கள் எல்லாம் வந்துவிடும் வீதிகளில் ...