Thursday, February 25, 2021

வசீகர புன்னகை….

 

வசீகர புன்னகை

வையம் கண்டிடாத

தூரிகை!

 

வார்த்தைகள்

குறும்பும் குதுகலமுமாய்

களிப்பூட்டும்

சில நேரங்களில்

வியப்பூட்டும்….

 

அன்பையும்

கோபத்தையும்

அளவிட்டு காட்டாத

அதிசயம்!

அடுத்த நொடியே

கனிவு மலர்ந்திடும்

காவியம்!

 

வகுப்பிற்கும்

விளையாட்டுக்கும்

இடையில்

இரண்டையும் நேர்த்தியாய்

சமநிலைப்படுத்தும்

சாணக்கியத்தனம்.

 

பாராட்டுகளையும்

பரிசுகளையும்

பெற்றபோதும்

எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்

ஒப்பற்ற பாராட்டை

அன்னையிடம்….

 

குறைகூற நினைத்ததில்லை

எதையும்

குறையாக கண்டதுமில்லை

இத்தனை பக்குவம்

எப்படி வந்தது

உன்னிடம்….

 

எத்தனை பொருட்களை

வாங்கி குவித்தாலும்

எதன்மீதும்

பெரிதாய் நாட்டம்

இருப்பதில்லை

பெற்றோர் அருகிலிருந்தால்….

No comments:

Post a Comment

குடிசை வாசிகள்

  நவீன மயமாக்கப்பட்ட நகர வீதியின் பூர்வகுடிகள் மழை பெய்து விட்டால் வானத்தின் கருமேகங்கள் எல்லாம் வந்துவிடும் வீதிகளில் ...