ஹைக்கூ
விசித்திரச் சந்தையில்
விற்கப் படுவோர்க்கே நட்டம்
வரதட்சணை !
…………...
சத்தமில்லாக் கடலோசை
வயிற்றுக்குள்
பசி
……………..
மரநிழல்
மண்ணில் விழுந்து
உணர்த்துகிறது
உங்களைப்போல்
எங்களைக் கருக
வைக்காதீர்கள் என்று..
……….
கானலைத் தேடி
வியர்வையில் கண்டேன்
நம்மிடம்தான்
வாழ்க்கை !
……………..
சார் அருமையான ஹைக்கூ கவிதைகள்
ReplyDelete